மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக ஹீட்டரை போட்டபோது மின்சாரம் தாக்கி நர்சு சாவு + "||" + For bathing When putting the heater on Nurse killed by electric shock

குளிப்பதற்காக ஹீட்டரை போட்டபோது மின்சாரம் தாக்கி நர்சு சாவு

குளிப்பதற்காக ஹீட்டரை போட்டபோது மின்சாரம் தாக்கி நர்சு சாவு
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, குளிப்பதற்காக ஹீட்டரை போட்டபோது மின்சாரம் தாக்கி நர்சு பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் அனிதா (வயது 20). இவர், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.


நேற்று காலை அனிதாவின் தாயார், டீ வாங்க கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த அனிதா, குளிப்பதற்காக சுடுதண்ணீர் போடுவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் ஹீட்டரை போட்டு வைத்து இருந்தார். பின்னர் தண்ணீர் சூடாகி விட்டதா? என்று தொட்டுப்பார்த்த போது மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.