திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு விழா கொண்டாட்டம்


திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2020 8:49 AM IST (Updated: 18 Oct 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திண்டுக்கல்,

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை, தமிழகம் முழுவதும் நேற்று அந்த கட்சியினர் கொண்டாடினர். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல்லில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து திருச்சி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், நத்தம் சாலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் கட்சி அலுவலகத்திலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், தேன்மொழி எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் சோனா சுருளிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளிதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ரெகுநாயகம், முனுசாமி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மூஞ்சிக்கல் பகுதியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு கொடைக்கானல் நகர செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இளம் பெண்கள், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் அழகு வினோத், அவைத்தலைவர் ஜான்தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார். இதில், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் சுதாகர், கூட்டுறவு வங்கி தலைவர் முகமது முஸ்தபா, முன்னாள் நகர்மன்ற தலைவர் (பொறுப்பு) எட்வர்டு, முன்னாள் அவைத்தலைவர் வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் பொன்னுத்துரை, மேல்மலை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பிச்சை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மாட்டுப்பட்டியில் நடந்த விழாவில், கொடைக்கானல் மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.சிவாஜி கட்சிக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பழனி பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில், பழனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாவட்ட ஆவின் தலைவர் செல்லச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், மாணவரணி மாவட்ட தலைவர் நவீன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜன் ஆகியோர் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் உதயம் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Next Story