மழையால், மணல் அள்ளுவதற்காக வேதாமிர்த ஏரி பணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்


மழையால், மணல் அள்ளுவதற்காக வேதாமிர்த ஏரி பணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்
x
தினத்தந்தி 18 Oct 2020 3:30 PM IST (Updated: 18 Oct 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

மழையால், மணல் அள்ளுவதற்காக வேதாமிர்த ஏரி பணியில் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேதாமிர்த ஏரி. ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய புனித நாட்களில் கடலில் புனித நீராடிவிட்டு, இந்த ஏரியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். இந்த ஏரி மழைநீரை கொண்டு மட்டுமே நிரம்புகிறது. அதிக மழை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் இந்த ஏரிக்கு வந்தடைந்து நிரம்புகிறது. தற்போது 70 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தூர்வாரப்படுகிறது.

ரூ. 6 கோடி நிதியில் தூர் வாரும் பணி மற்றும் சுற்று சுவர் அமைத்தல், பொதுமக்கள் நடைபயிற்சிக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களும் அமைக்கப்படும் பணி நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட பொக்லின் எந்திரங்கள், 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இந்த பணியினை அமைச்சர் ஒ.எஸ். மணியன், நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், வழக்கறிஞர் நமசிவாயம், நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன் ஆகியோர் பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் விரைந்து பணிகளை முடிக்க மணல் அள்ளுவதற்கு நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் ஏரியில் குவிந்தன. பின்னர் வேதாமிர்த ஏரிக்கரையில் மழையால் மணல் அள்ளுவதற்காக நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் ஈடுபட்டன. இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

Next Story