நீடாமங்கலம் அருகே, ஈரப்பதமான நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள்
நீடாமங்கலம் அருகே ஈரப்பதமான நெல்லை விவசாயிகள் காய வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் உள்ள 43 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் 16 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் கோடை சாகுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பல்வேறு கிராமங்களில் பம்புசெட் மூலம் செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் எதிரே மற்றும் அருகில் குவிந்து வைத்திருந்தனர். கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் குவிந்து வைத்திருந்த நெல் நிறம் மாறியும், பல இடங்களில் முளைத்தும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கொள்முதல் நிலையங்களில் 600 முதல் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் அரசு உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தினந்தோறும் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆதனூர் தட்டி பகுதியில் குறுவை அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாக 2 ஆயிரம் மூட்டை ஈரமுள்ள நெல்லை விவசாயிகள், தொழிலாளர்கள் காய வைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை அறுவடை செய்து 15 நாட்களாக 2 ஆயிரம் நெல் மூட்டைகள் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story