சோளகம்பட்டி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சோளகம்பட்டி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைத்துதரக்கோரி ரெயில் நிலையத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் ஒன்றியம் சோளகம்பட்டி ரெயில் நிலையத்தின் முன்பு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அப்பகுதி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய விவசாய சங்க தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சோளகம்பட்டி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும். கடம்பன்குடி-பொன்விளைந்தான்பட்டி இடையே உள்ள மண்சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும்.
கல்லணை கால்வாயில் பொன்விளைந்தான்பட்டி-கடம்பங்குடியை இணைக்கும் வகையில் உள்ள பழுதடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவகுமார், பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர்கள் காந்தி, பாஸ்கர் ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி சிவக்குமார்(வெண்டையம்பட்டி), அசோக்குமார்(கடம்பன்குடி) மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story