மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for 2 teenagers at Kovilpatti

கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி,

கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் சுபா நகரில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இந்திரா நகரைச் சேர்ந்த ராஜாமணி மகன் வைர பிரகாஷ் (24). இவர் அப்பகுதியில் உள்ள கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார்.


இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் இளையரசனேந்தல் சாலையில் வந்தனர். அப்போது அங்கு வந்த கடலை மிட்டாய் கடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சுபா நகரைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் (30) என்பவர் அவர்களை வழிமறித்து பேசினார்.

இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அரிவாளால் வைர பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயமடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் குருச்சந்திர வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு வெங்கடேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லிவாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு தடுக்க முயன்றவரும் படுகாயம்
வில்லிவாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரரை காலால் எட்டிஉதைத்ததால் அவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
2. சென்னையில் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு பெண் ஊழியர் மீதும் தாக்குதல்
சென்னை கே.கே.நகரில் தி.மு.க. பிரமுகர் தனசேகரனை அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பி சென்று விட்டனர். அவரது அலுவலக பெண் ஊழியரை தாக்கியதை தடுத்தபோது தனசேகரன் வெட்டப்பட்டார்.
3. சென்னையில் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
சென்னை கே.கே.நகரில் தி.மு.க. பிரமுகர் தனசேகரனை அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பி சென்று விட்டனர். அவரது அலுவலக பெண் ஊழியரை தாக்கியதை தடுத்தபோது தனசேகரன் வெட்டப்பட்டார்.
4. மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு
மானூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. அவினாசி அருகே காருக்கு வழிகேட்டவரின் கையை வெட்டிய 3 பேர் கைது கார்-அரிவாள் பறிமுதல்
அவினாசி அருகே காரில் சென்ற போது வழி கேட்டவரின் கையை அரிவாளால் வெட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.