சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது; 25 பவுன் நகை மீட்பு


சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது; 25 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 1:03 AM IST (Updated: 19 Oct 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பவானி,

பவானியை அடுத்த சித்தோடு நால்ரோடு பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

கைது

விசாரணையில், ‘அவர் மதுரை ஆலப்பாளையம் செக்கடி தெருவை சேர்ந்த சோனையன் என்பவரின் மகன் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் (வயது 31) என்பதும், அவர் சித்தோடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story