மாவட்ட செய்திகள்

தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு + "||" + Recovery of the body of the missing auditor on the tracks in Thane

தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு
தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
தானே,

தானேயை சேர்ந்தவர் சாகர் தேஷ்பாண்டே(வயது38). தணிக்கையாளரான இவர், கடந்த 11-ந்தேதி டிட்வாலா சென்றுவிட்டு வருவதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். இதன்பின் மாலை வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்து இருந்தனர்.


இந்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் மறுநாள் டிட்வாலா-காதிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தையொட்டி ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடல் மீட்பு

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட சாகர் தேஷ்பாண்டே என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது அங்கு நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் சாகர் தேஷ்பாண்டேக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 80 அடி உயர நீர்வீழ்ச்சியில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
சிவமொக்கா அருகே 80 அடி உயர நீர்வீழ்ச்சியில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
2. காணாமல் போன 102 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 102 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
3. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
4. ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்பு
ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
5. கிரிக்கெட் விளையாடியபோது 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு
பல்லடம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் லேசான காயத்துடன் உயிருடன் தீயணைப்பு படையினர் மீட்டனர்.