வெள்ளசேதத்தை முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே நாளை பார்வையிடுகிறார்


வெள்ளசேதத்தை முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே நாளை பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 18 Oct 2020 8:33 PM GMT (Updated: 18 Oct 2020 8:33 PM GMT)

மழையினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை பார்வையிட மாநில முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே சோலாப்பூர் மற்றும் உஸ்மானாபாத், அவுரங்காபாத், கொங்கன் பிரிவு மண்டலத்திற்கு நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையின் காரணமாக விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த மழையினால் மாநிலத்தில் மொத்தம் 48 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் மழையினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை பார்வையிட மாநில முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே சோலாப்பூர் மற்றும் உஸ்மானாபாத், அவுரங்காபாத், கொங்கன் பிரிவு மண்டலத்திற்கு நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

ஏற்கனவே புனே மண்டலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை துணை முதல்-மந்திரி அஜித்பவார் பார்வையிட்டு சென்றார். மேலும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஜல்காவ், நாக்பூர் போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story