அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நாயக்கன் பேட்டை பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து கட்சியில் இணைய ஆர்வத்துடன் வந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களிடம் பாசறை உறுப்பினர்களாக சேர்க்கும் விண்ணப்பப் படிவங்களை பெற்று கொண்டார்கள்.
நிகழ்ச்சியில், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி கன்னிவேல், அ.தி.மு.க.நிர்வாகிகள் வெள்ளேரியான், ஏகாம்பரம், கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல் காஞ்சீபுரம் அருகே ஏகனாம்பேட்டையில் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் அ.தி.மு.க.சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
இதில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் அக்ரி கே.நாகராஜன், அம்மா பேரவை நிர்வாகி மார்க்கெட் வி.அரிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story