தனியார் நிறுவனத்திற்கு வந்த லாரியை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் - கொரடாச்சேரி அருகே நடந்தது
தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி தனியார் நிறுவனத்திற்கு வந்த லாரியை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி,
கொரடாச்சேரி அருகே வெள்ளக்குடியில் தனியார் சோப்பு கம்பெனிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 50 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களில் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் 90 சதவீத தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு மூலப்பொருள்களை லாரியில் இருந்து இறக்கப்படுவதற்கும், ஏற்றப்படுவதற்கும் மட்டுமே இங்குள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் மிகவும் குறைந்த அளவில் 15 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனத்திற்கு லாரியில் கொண்டு வரப்படும் மூலப்பொருட்கள் ஏற்கனவே 50 கிலோ எடையில் கொண்டு வரப்பட்டது. தற்போது இங்குள்ள தொழிலாளர்களை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட மூட்டையாக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மூட்டைகளை இறக்குவதற்கு தொழிலாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை காரணம் காட்டி அந்த நிறுவனம் எந்திரங்கள் மூலம் பொருட்களை இறக்கி வந்துள்ளது. எனவே இந்த தனியார் நிறுவனத்தின் தமிழக தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், நிறுவனத்தின் உள்ளே உற்பத்தி பிரிவில் பணியாற்றுவதற்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க கோரியும், மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு நிறுவனத்தின் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் தனியார் நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், பொறுப்பாளர்கள் கதிர்வேல், பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story