குளித்தலை அருகே வாய்க்கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குளித்தலை அருகே வாய்க் கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக் கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருங்கலாப்பள்ளி - கணப்பிள்ளையூர் செல்லும் வாய்க்கால்கரை சாலையில், கருங்கலாப்பள்ளி பகுதியில் இருந்து ரெத்தினம்பிள்ளைபுதூர் செல்வதற்கு, இப்பகுதி வழியாக செல்லும் கட்டளை மேடு, புதிய கட்டளைமேடு ஆகிய இருவாய்க்கால்களின் மேல் இரண்டு நடைபாலங்கள் உள்ளன. இந்த நடைபாலம் வழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் எடுத்து செல்லவும், விளைந்த பயிர்களை எடுத்துசெல்லவும் மற்றும் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், அதற்கு தேவையான உணவு பொருட்களை எடுத்து செல்லுதல் போன்ற பல்வேறு பணிக்காக இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலங்கள் ஆங்கிலேயர் மற்றும் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் என கூறப்படுகிறது. இப்பாலங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனகாரணத்தால், இரண்டு பாலங்களும் சேதமடைந்துகொண்டே வருகிறது. இங்குள்ள ஒரு நடைபாலத்தின் இரண்டு பக்கம் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டிலான தடுப்புகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இருப்புறமும் தடுப்புகள் இல்லாத இந்த நடைபாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களில் சிலர் தங்களது மோட்டார் சைக்கிளுடன் வாய்க்கால் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அச்சத்துடனேயே இப்பாலத்தில் பொதுமக்கள் நடந்தும், கால்நடைகளை மேய்சலுக்கு அழைத்து சென்றும் வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இப்பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், கால்நடைகள் இந்த வாய்க்காலில் தவறிவிழுந்து உயிரிழக்காதவகையில், முற்றிலும் தடுப்பு சுவர் இன்றி சேதமடைந்துள்ள நடைபாலத்தின் இருபுறமும், நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடுப்புகள் அமைக்க வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அல்லது ஊராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story