49-ம் ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


49-ம் ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 11:43 AM IST (Updated: 19 Oct 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் அ.தி.மு.க. 49-ம் ஆண்டு தொடக்க விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரத்தில் அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு விழா புதிய பஸ் நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் தாமோதரன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் வக்கீல் சுரேஷ்குமார், நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சியில் நடந்த விழாவில் பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் சின்னப்பையன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காக்காவேரியில் நடந்த நிகழ்ச்சியில் பி.ஆர்.சுந்தரம் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் காக்காவேரி ஊராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் துரைசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர் கருப்புசாமி, இயக்குனர் மேஸ்திரி ராமசாமி மற்றும் கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு விழா நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் கட்சியினர் கொண்டாடினர். மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு, தொப்பபட்டி, ஜேடர்பாளையம், சீராப்பள்ளி உள்பட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சரவணன் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன், நிர்வாகிகள் தங்கவேலு, முன்னாள் தலைவர் பச்சமுத்து, கவுன்சிலர் பாலு, நாமகிரிபேட்டை நகர செயலாளர் ரமேஷ், சீராப்பள்ளி நகர செயலாளர் நாகச்சந்திரன், சீராப்பள்ளி நகர முன்னாள் செயலாளர் கணேசன், பூபதி, கணபதி, சுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story