ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்


ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 11:11 PM IST (Updated: 19 Oct 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பங்கேற்பு.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புளியங்குளம் மற்றும் தாதன்குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இம்மோதல்களை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் இரு கிராம பொதுமக்களுக்கு இடையே நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரன் ஜித்சிங் கலோன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், செய்துங்கநல்லூ போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ஜோசப் ஜெட்சன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில்,‘அனைவரும் சகோதர உணர்வுடன் பழக வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளை சமுதாய மோதல்களாக மாற்றி விட கூடாது. எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது. அனைவரும் ஒற்றுமையாக, ஒருதாய் பிள்ளைகள் போல பழக வேண்டும். இளைஞர்கள் ஒரு பிரச்சினையில் ஈடுபடும்போது அதன் விளைவுகளை முன்கூட்டியே யோசிக்க வேண்டும். உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், அது உங்களின் வாழ்க்கையை பாதிக்கும். அரசாங்க வேலை கிடைக்காது. இளைஞர்கள் சமூக வலைதளைங்களில் தங்களுக்கு கிடைக்கும் தவறான தகவல்களை பதிவிடுவதை நிறுத்த வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பபை ஏற்படுத்தி தர நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார். இதில் புளியங்குளம் மற்றும் தாதன்குளம் ஊர்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story