நாசரேத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாசரேத்,
நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செந்தூர் தொகுதி மருத்துவரணி செயலாளர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் ராஜசேகர், ரத்தின பாண்டி மற்றும் இள. மாரியப்பன், நவீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் பாசறை செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாசரேத் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story