பி.ஐ.எஸ். முத்திரை கட்டாயம்: பொம்மை தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குமாரசாமி கண்டனம்


பி.ஐ.எஸ். முத்திரை கட்டாயம்: பொம்மை தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குமாரசாமி கண்டனம்
x
தினத்தந்தி 20 Oct 2020 3:56 AM IST (Updated: 20 Oct 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

பி.ஐ.எஸ். முத்திரை பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பது பொம்மை தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சிறு தொழில் செய்கிறவர்கள் கூட பி.ஐ.எஸ். முத்திரை வழங்கும் அமைப்பிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, இதனால் சிறிய அளவில் குடிசை தொழில் செய்கிறவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பொம்மை தயாரிப்பாளர்கள், பி.ஐ.எஸ். முத்திரையை கட்டாயம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இது பொம்மை தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த முத்திரை சான்றிதழை பெற ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சாதாரண பொம்மை தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவை, குடிசை தொழில்களை கடுமையாக பாதிக்கும்.

வேலை இழக்கும் நிலை

மன் கீ பாத் நிகழ்ச்சியில் சென்னப்பட்டணா பொம்மைகள் குறித்து பெருமையாக பேசிய மோடி, இப்போது அந்த பொம்மை தயாரிப்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். பெரிய தொழில் அதிபர்களின் நலனை காக்கும் இத்தகைய முடிவுகளால் விளையாட்டு பொம்மைகளை தயாரிக்கும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அதனால் இந்த பி.ஐ.எஸ். முத்திரையை கட்டாயப்படுத்தும் முடிவை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இதன் மூலம் குடிசை தொழில்களை காக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story