நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு


நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2020 4:15 AM IST (Updated: 20 Oct 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் கடைபிடிக்கிறார்களா? என கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

தமிழக அரசு கொரோனா நோய் தொற்றினை தடுக்க முழு ஊரடங்கு, 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என்று அறிவுத்தப்பட்டு வரும் நிலையில் அவை சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா? என்று அரசுத்துறை அலுவலர்களால் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி மற்றும் சேலம் ரோடு சந்திப்பு பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகள், உணவகங்களில் அரசினால் அறிவுறுத்தப்பட்டு உள்ள கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் முககவசம் அணிந்து செல்கிறார்களா? எனவும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாத 25 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசின் விதிகளை கடைபிடிக்காத ஒரு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி என்ஜினீயர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் சுகவனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story