திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது டிரைவர்-கிளீனர் உயிர்தப்பினர்


திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது டிரைவர்-கிளீனர் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:45 AM IST (Updated: 21 Oct 2020 8:02 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியிலிருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது. இதில் டிரைவர்-கிளீனர் உயிர் தப்பினர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு முத்துப்பேட்டை வழியாக ஒரு லாரி சென்றது. அப்போது ஆலங்காடு அண்ணா சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருவாரூர் வடபாதிமங்கலம் பேரையூரை சேர்ந்த டிரைவர் முருகேசன் (வயது50) , திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிளீனர் மாதவன் (45) ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நெல் மூட்டைகளை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story