சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி - பெண் உள்பட 2 பேர் படுகாயம்
சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசியை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 65). இவர் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று முதியவர் சாரங்கபாணியின் மீது மோதியது. பின்னர் அந்த வாகனம் அதே ரோட்டில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ராம்பிரபு, லலிதாராணி ஆகியோர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் சாரங்கபாணி, ராம்பிரபு, லலிதாராணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சாரங்கபாணியை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராம்பிரபு, லலிதாராணி ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் குருசாமியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story