அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை,
கிராம பகுதிகளில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மாநில கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், முத்துராமலிங்கபூபதி, கருப்புசாமி, மோகன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடக்கும் போது சிவகங்கையில் மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story