மாவட்ட செய்திகள்

பரமத்தி, கபிலர்மலையில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு + "||" + Paramathi, Kapilarmalai Road-laying works Collector inspection

பரமத்தி, கபிலர்மலையில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

பரமத்தி, கபிலர்மலையில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
பரமத்தி எல்லை வரையில் ரூ.90.10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி பரமத்தி ஊராட்சி ஒன்றியம் சிக்கநாயக்கன்பாளையம் முதல் குன்னமலை மற்றும் பரமத்திரோடு முதல் நல்லூர் வரை ரூ.228.32 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை, நல்லூர் கபிலர்மலை ரோடு பரமத்தி எல்லை வரையில் ரூ.90.10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதேபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் நெட்டையம்பாளையம் வழியாக சேளூர் செல்லப்பம்பாளையம் வரை ரூ.114.25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளையும், கபிலர்மலை முதல் சுப்பையம்பாளையம் வரை ரூ 83.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் யுவராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பிரபாகரன் மற்றும் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் தனம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.