விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது


விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2020 8:24 PM IST (Updated: 21 Oct 2020 8:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் நேற்று காலை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது பாலசிங்கம் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்து விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் பழைய சிந்தாமணி சாலை பகுதியை சேர்ந்த செல்வம் மகன்கள் அரவிந்த்சாமி (வயது 27), விஜய்(20), விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(37) என தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு பால் விற்பனையகத்தில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடியதும், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த மூதாட்டியிடம் அரை பவுன் நகையை பறித்ததும், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து மடிக்கணினியை திருடியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அரவிந்த்சாமி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் அரை பவுன் நகை, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே விழுப்புரம் பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story