அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கக்கோரி நாகையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கும் போக்கை கைவிட வேண்டும். திண்டுக்கல் சிறுமி கலைவாணி பாலியல் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலைகழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story