மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Oct 2020 3:30 AM IST (Updated: 22 Oct 2020 9:05 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 481 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 16 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 3 ஆயிரத்து 153 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

14 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 3 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 99 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த 63 வயது முதியவர், மாடர்ன் நகரை சேர்ந்த 43 வயது நபர், கச்சேரி ரோட்டை சேர்ந்த 63 வயது முதியவர், கே.ஆர்.காடர்ன் பகுதியை சேர்ந்த 54 வயது நபர், கே.வி.டி.ரோட்டை சேர்ந்த 64 வயது முதியவர், சத்திரரெட்டியப்பட்டியை சேர்ந்த 56 வயது நபர், சூலக்கரையை சேர்ந்த 69 வயது முதியவர், கங்காகுளம், கே.மேட்டுப்பட்டி, குன்னூர், சொக்கநாதன்புதூர், கோபாலபுரம், பாலவநத்தம் தெற்கு பட்டியை சேர்ந்த 2 பேர், ராமசாமிபட்டி, ரெங்கநாயக்கன்பட்டி, மல்லாங்கிணறு உள்பட மாவட்டம் முழுவதும் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,135 ஆக உயர்ந்துள்ளது. 1,615 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 3,153 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

நேற்றும் கிராமப்பகுதிகளிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story