மாவட்ட செய்திகள்

தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு + "||" + Collector study in blonde on the occasion of Thevar Gurupuja

தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு

தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு
தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. விழாவில் 28-ந் தேதி தேவரின் ஆன்மிக விழாவும் 29-ந் தேதி அரசியல் விழா, 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுகிறது. 30-ந் தேதி காலை 9 மணிக்கு அரசு சார்பில் விழா நடைபெறுகிறது. குருபூஜை விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். அதனைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்டு, பா.ம.க. அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவையொட்டி பால்குடம், பொங்கல், முளைப்பாரி மற்றும் ஜோதி ஓட்டம் நடக்கும். பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது கொரோனா காரணமாக மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பசும்பொன் வருகை தந்து திடீர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.பசும்பொன் நினைவிடம், புகைப்பட கண்காட்சி வளாகம், பொதுமக்கள் செல்லும்வழி, முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும்வழி, தியான மண்டபம், கழிப்பறை, குடிநீர் வசதி, வாகனம் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

பசும்பொன் வருகைதந்த கலெக்டர் வீரராகவராவை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பழனி, தங்கவேல், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து தற்போது 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை கருவிகள் வினியோகம் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
3. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மையத்தில் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு நடத்தினார்.
4. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிய வீடுகள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்து உள்ளார்.
5. மாநில வளர்ச்சி குழு துணைத்தலைவர் நிதி திட்ட செயல்பாடுகளை காணொலி காட்சியில் ஆய்வு - கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்பு
மாநில நிதி திட்ட செயல்பாடுகள் குறித்து மாநில வளர்ச்சி குழுவின் துணைத்தலைவர் பொன்னையன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.இதில் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்றார்.