நெல்லை சாலைகளில் வரையப்பட்டுள்ள அழகிய சுவர் ஓவியங்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு


நெல்லை சாலைகளில் வரையப்பட்டுள்ள அழகிய சுவர் ஓவியங்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு
x
தினத்தந்தி 22 Oct 2020 5:05 PM IST (Updated: 22 Oct 2020 5:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சாலைகளில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி,

நெல்லை மாநகரை புதுப்பொலிவுடன் மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்டத்தினை அழகுபடுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சுவர்களில் உள்ள சாலைகளில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டத்தின் அடையாளங்களை தத்ரூபமாக வரையும் பணியை சேரன்மகாதேவி கவின்கலைக் கல்லூரி மேற்கொள்கிறது. இதனை பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஓவியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பணியை தொடர இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story