மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைவு 10-ம் வகுப்பு மாணவர் மாயம் + "||" + In the online class Score low 10th grade student magic

ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைவு 10-ம் வகுப்பு மாணவர் மாயம்

ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைவு 10-ம் வகுப்பு மாணவர் மாயம்
சேலம், நாமக்கல், ஆன்லைன் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர் மாயமானார்.
சேலம்,

நாமக்கல் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தீபா. இவருடைய மகன் சஞ்சய் கவுசிக் (வயது 15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 19-ந் தேதி கடையில் இருந்துள்ளார். இந்தநிலையில் மாணவர் ஆன்லைன் வகுப்பு மூலமாக நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் வெளியில் சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை என்று தெரிகிறது.


அவரை பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவரின் பெற்றோர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகின்றனர். மாணவர் பச்சை மற்றும் கருப்பு நிறம் கலந்த டி-சர்ட் அணிந்திருந்தார். மாணவர் எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.