மாவட்ட செய்திகள்

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் 4-வது கட்ட பணி + "||" + Tamiraparani-Karumeniyaru-Nambiyaru river connection canal 4th phase work

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் 4-வது கட்ட பணி

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் 4-வது கட்ட பணி
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தின் 4-வது கட்ட பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நெல்லை, 

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக வெள்ளாங்குளி கன்னடியன் கால்வாயில் இருந்து பச்சையாறு வரையிலும், 2-வது கட்டமாக பச்சையாற்றில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரையிலும், 3-வது கட்டமாக மூலைக்கரைப்பட்டியில் இருந்து காடன்குளம் வரையிலும் கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து 4-வது கட்டமாக நம்பியாற்றில் இருந்து எம்.எல்.தேரி வரையிலும் கால்வாய் தோண்டுவதற்கு அரசு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 4-வது கட்ட கால்வாய் தோண்டும் பணி தொடக்க விழா, திசையன்விளை அருகே ஆயன்குளம் பகுதியில் நேற்று நடைபெற்றது. ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை தலைமை தாங்கி, 4-வது கட்ட கால்வாய் தோண்டும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ரூ.160 கோடி ஒதுக்கீடு

தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை பயன்படுத்தும் வகையில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இதுவரை ரூ.631 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். தற்போது 4-வது கட்ட பணிக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மார்ச் மாதத்தில்...

இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆயிரம் எக்டர் நிலம் பாசன வசதி பெறும். இந்த பணிகள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். ராதாபுரம் தொகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் துரைசாமி, இலக்கிய அணி பொருளாளர் ரமேஷ், திசையன்விளை ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.பி.ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனி சங்கர், கூடங்குளம் லிங்கத்துரை, எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி, தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் சபாபதி நாடார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், செயற்பொறியாளர்கள் ரமேஷ், சிவக்குமார் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தின் 10 கோடி உணவு வழங்கும் திட்டம்: இந்திய தொழிலதிபர் 10 லட்சம் திர்ஹாம் நன்கொடை
ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த வாரம் 20 நாடுகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு 10 கோடி உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2. அமீரகத்தின் நிலவு பயண திட்டம்: 2022-ம் ஆண்டில் ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் செலுத்தப்படும் அதிகாரி தகவல்
அமீரகத்தின் நிலவு பயண திட்டத்தில் திட்டமிடப்பட்ட 2 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே வருகிற 2022-ம் ஆண்டில் ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
3. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒட்டன்சத்திரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்குறுதி
தி.மு.க. ஆட்சி அமைந்ததும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
4. குறைகளை அரசுக்கு மக்கள் தெரிவித்து உடனடியாக தீர்வுகாண ‘1100 எண் தொலைபேசி’ சேவை திட்டம்
மக்கள் தங்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்து உடனடியாக தீர்வுகாண வசதியாக 1100 எண் தொலைபேசி சேவை என்ற திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
5. பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்ய அரியானா அரசு திட்டம்
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்யும் சட்டம் கொண்டு வர அரியானா அரசு திட்டமிட்டு வருகிறது.