விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 23 Oct 2020 4:45 AM GMT (Updated: 2020-10-23T10:21:08+05:30)

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ரமணா, மாவட்ட பொருளாளர் ராகுல், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் சந்தோஷ், தீபன், சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வளைதளங்கள் மூலம் பாலியல் கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும், விஜய் சேதுபதியின் குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story