நாளை ஆயுத பூஜை: நெல்லையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது


நாளை ஆயுத பூஜை: நெல்லையில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 23 Oct 2020 11:34 PM GMT (Updated: 23 Oct 2020 11:34 PM GMT)

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, நெல்லையில் பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை, 

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு தொழில் செய்கிறவர்களும் அவரவர் தொழில் சிறக்க பூஜைகள் நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் பூஜைக்கான ஏற்பாடுகளை தொழில் நிறுவனத்தினர் செய்து உள்ளனர். இதையொட்டி நெல்லை டவுன் மற்றும் பாளையங்கோட்டை கடை வீதிகளில் உள்ள கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

ஆர்வம்

அவர்கள் ஆர்வத்துடன் அவல், பொரி கடலை, பொரி மற்றும் சூடன், பத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பூஜை பொருட்களையும், காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.

Next Story