மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது + "||" + Near Jayankondam, a worker who sexually harassed a girl was arrested in Pokcho

ஜெயங்கொண்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 43). கூலி தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம்போட்டார். அதை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் மாடிக்கு சென்று சிறுமியை மீட்டனர். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பிச்சை பிள்ளையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிச்சை பிள்ளையை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிச்சை பிள்ளைக்கு திருமணமாகி 4 பெண், ஒரு ஆண் என 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.