ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்


ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Oct 2020 11:45 AM IST (Updated: 24 Oct 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் என்று கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம் அளித்தார்.

இடிகரை,

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் சங்கீதா (வயது 59). திருநங்கை. இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவராக இருந்தார். இவர் திருநங்கைகளுடன் இணைந்து வடகோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் 9 திருநங்கைகள் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், சங்கீதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வீட்டின் உரிமையாளர் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சங்கீதா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உடலை டிரம்மில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவு பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சங்கீதாவின் ஓட்டலில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 23) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அவர் சங்கீதாவுடன் தங்கியிருந்தார். கொலை நடந்த பிறகு அவர் மாயமானதால் ராஜேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. இதனால் போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்த போது ராஜேஷ் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று ராஜேசை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், சங்கீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வரப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் நாகப்பட்டினத்தில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தேன். இந்த நிலையில் கோவையில் திருநங்கை சங்கீதா ஓட்டல் நடத் துவதை யூடியூப்பில் பார்த்து அவரது செல்போன் எண்ணில் பேசி வேலைக்கு வரலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் சம்மதம் தெரி வித்தார். அதன்படி 23 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து சங்கீதாவின் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தேன். என்னை சங்கீதா அவருடைய வீட்டிலேயே தங்க அனுமதித்தார்.

அவர் திருநங்கை என்பதால் என்னுடன் ஆசைக்கு இணங்குமாறு நான் வற்புறுத்தி வந்தேன். அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்த போது நான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், நீ இப்படி நடந்துகொண்டால் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சங்கீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அங்கிருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சங்கீதாவின் உடலை போட்டேன். அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது எங்கள் ஊரில் யானை ஒன்று இறந்து போது துர்நாற்றம் வராமல் இருக்க உப்பு தூவி புதைத்த னர். அதன்படி திருநங்கையின் உடல் மீது சமையல் அறையில் இருந்த உப்பை எடுத்து கொட்டினேன். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டு கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு தப்பி சென்றேன். முன்னதாக புதிதாக செல்போன் ஒன்று வாங்கினேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

திருநங்கை சங்கீதாவை கொலை செய்த பிரியாணி மாஸ்டர் ராஜேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story