மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம்


மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம்
x
தினத்தந்தி 24 Oct 2020 11:11 PM GMT (Updated: 24 Oct 2020 11:11 PM GMT)

மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம் உத்தவ்தாக்கரே இரங்கல்.

மும்பை, 

மராட்டிய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விநாயக் தாதா பாட்டீல் சிறுநீரக கோளாறால் அவதி அடைந்து வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசிக்கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மறைந்த விநாயக்தாதா பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு நெருக்கமானவர். பாட்டீலின் மறைவு குறித்து முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே டுவிட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டார். அவர் மாநில மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றியதாக புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

Next Story