மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி + "||" + Checkpoints at 25 locations in RR Nagar for by-elections

இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி

இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி
இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகருக்கு (ஆர்.ஆர்.நகர்) வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குசுமா ரவியும், பா.ஜனதா சார்பில் முனிரத்னாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியை கைப்பற்ற 3 கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் போலீசார், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கொடி அணிவகுப்பு

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்க ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஞானபாரதி, சீனிவாஸ் சர்க்கிள், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கர்நாடக ஆயுதப்படை போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
2. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியிருந்ததற்கு எதிர்ப்பு
இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
3. கடம்பூர்-கங்கைகொண்டான் இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
கடம்பூர்-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.
4. கேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகள்
கேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்.