மாவட்ட செய்திகள்

வில்லியனூர் அருகே பயங்கரம்: மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Terror near Villianur: Bomb blast on liquor store Police net to mysterious persons

வில்லியனூர் அருகே பயங்கரம்: மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வில்லியனூர் அருகே பயங்கரம்: மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வில்லியனூர் அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வில்லியனூர், 

வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் தனியார் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம்போல் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் இரவு 7.30 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மதுக்கடை மீது வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் கடையில் இருந்த மதுபிரியர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். கடையின் சுவரில் விழுந்து குண்டு வெடித்ததால் அங்கிருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

அதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசிய நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டுவதற்காக வீசப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒருவர் கைது.
2. முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு
திருமானூர் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையை கிறிஸ்துமஸ் குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. சாணார்பட்டி அருகே பரபரப்பு: செங்கல் சூளை அதிபர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
சாணார்பட்டி அருகே செங்கல் சூளை அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5. நாகர்கோவிலில் பரபரப்பு விஜயகுமார் எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீச்சு
நாகர்கோவிலில் அ.தி. மு.க. எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.