திருப்பத்தூரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
திருப்பத்தூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பத்தூர்,
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவு தின அரசு விழாவுக்கு வருகை தந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், பாம்கோ தலைவர் ஏ.வி.நாகராஜன், துணைத்தலைவர் மெய்யப்பன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் கருணாகரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ராஜா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, ஓய்வு பெற்ற சார்பதிவாளர் இளங்கோவன், இளைஞர், இளம்பெண்கள் மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, வடிவேல், ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரன், புதுவயல் சுரேஷ், திருப்பத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், அம்மா பேரவை புதுத்தெரு முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, நெற்குப்பை நேரு, மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி. ராஜேந்திரன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன், மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக்குடி மண்டல அண்ணா தொழிற் சங்கம் சார்பில் காளையார்கோவில் மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இளையான்குடி அ.தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இளையான்குடி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் வரவேற்பு அளித்தார்.இதில் இளையான்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், கோபி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story