ஆரணி சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

ஆரணி சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Oct 2020 9:48 AM IST (Updated: 27 Oct 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

ஆரணி, 

ஆரணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், பி.ஆர்.ஜி.சேகர், ப.திருமால், நகர செயலாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமுண்டீஸ்வரிசுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story