நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 3:45 AM IST (Updated: 29 Oct 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மயில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆசீர் சார்லஸ் நீல் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

50 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளை உடனே திரும்ப பெற வேண்டும். 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story