செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட எதிர்ப்பு
செந்துறை அருகே 60 ஆண்டுகால பழமையான ஆலமரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பரணம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்க வளாகத்தில் 60 ஆண்டுகள் பழமையான 3 ஆலமரங்கள் உள்ளன. கடன் சங்கத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் இங்கு ஓய்வுஎடுத்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆலமரங்களை வெட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாற்று இடத்தில்....
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, தற்போது, போதிய மழைபெய்வதில்லை. இதனால் மரம் வளர்ப்பது என்பது இயலாதகாரியம் ஆகும்.
மேலும் மரத்தை கடும் சிரமங்களுக்குஇடையே வளர்க்க வேண்டியுள்ளது. இங்குள்ள மரங்கள் சுமார் 60 ஆண்டுகாலமாக உள்ளன. இது பொதுமக்களுக்கு நிழல்தருவது மட்டுமின்றி, பறவைகளின் தங்குமிடமாகவும் உள்ளது. தற்போது மரங்கள் விழுது விட்டு நன்றாக உள்ளது. எனவே இந்த மரத்தை பிடுங்கி மாற்று இடத்தில் நடவேண்டும் அல்லது மரங்களை வெட்டாமல் மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story