அந்தேரியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தபசும் பிரவின் (வயது29) . பெயிண்டராக பணி செய்து வந்த இவர் அந்தேரி மேற்கு யாரி ரோடு பகுதியில் உள்ள கட்டிடத்தில் தனியாக வசித்து வந்தார்.
அவர் மனஅழுத்தம் காரணமாக அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story