அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு என்பது நாடகம் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு என்பது நாடகம் என அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற ஒரு நாடகத்தனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறவேண்டும். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுதோறும் சுமார் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை திட்டமிட்டு இழப்பினை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள உள்ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாற கவர்னரின் ஒப்புதலுக்காக இருக்கிறது. அதற்குரிய ஒப்புதலை பெற தமிழக அரசு பல வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை கொண்டுவரவில்லை என்று ஒட்டுமொத்த மக்களும் கேள்வி எழுப்பினர்.
இதனால் தமிழகத்தில் 7.5 சதவீதம் தானே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருகின்றனர். நான் அதைவிட அதிகமாக கொடுக்கிறேன் என்று 10 சதவீத உள்ஒதுக்கீட்டை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை அறிவிக்கும்போதே கவர்னர் ஒப்புதல் தராவிட்டால் கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என்று அரசியல் ரீதியில் நாராயணசாமி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் இருந்தே இந்த உள்ஒதுக்கீடு என்பது தனது எதிர்ப்பு அரசியலுக்காகவே கொண்டுவருவது தெளிவாகிறது. உண்மையிலேயே உள்ஒதுக்கீடு வழங்க நினைத்திருந்தால் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கவேண்டும். அதை செய்யாமல் தற்போது அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் அறிவிக்கப்பட்டதும் கவுன்சிலிங் நடத்தப்படும். இதுபோன்ற சூழலில் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது முதல்-அமைச்சருக்கு அக்கறை இருந்தால் இடஒதுக்கீட்டிற்கு கவர்னர் அனுமதி வழங்கும்வரை சென்டாக் கவுன்சிலிங்கை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story