ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குகளை நேர்மையாக பயன்படுத்துவார்கள் கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை
ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தேர்தலின்போது வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நேர்மையாக பயன்படுத்துவார்கள் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழாவை யொட்டி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஊழல் எதிர்ப்பு தொடர்பான சி.பி.ஐ. மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கும் போது, வெளிப்படைத் தன்மை, தொழில்நுட்பம், சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஊழலை ஒழித்து வெளியேற்ற வேண்டும் என இந்திய மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதி பரிமாற்றம் செய்யப்படுவது, கோடிக்கணக்கான பொதுப் பணத்தை நாடு கடத்தாமல் காப்பாற்றியது எப்படி என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
நண்பர்களே, உங்களுடைய அனைத்து துறைகளும் இந்த விழிப்புணர்வை கடைபிடிக்கின்றன என்று நான் நம்புகிறேன். நீங்கள் முன்கூட்டியே இதற்காக திட்டமிட்டிருக்கலாம். இந்த விழிப்புணர்வு வாரத்தில் மூத்த தலைவர்கள் கலந்துகொள்ளவும் வார இறுதியில் நீங்கள் அடைந்த முடிவுகளை பகிர்ந்து கொள்ளவும் பரிந்துரைக்கிறேன்.
இந்த சாதனைகளை அனைத்து துறைகளும் தெரிந்துகொள்ள வளமான புதுச்சேரி குழுக்களில் பதிவிடுங்கள். இந்த பதிவுகள் அனைத்தும் சனிக்கிழமை மாலைக்குள் பகிரப்பட வேண்டும். அதிகப்படியான மக்களுக்கு அதிகபட்ச தகவல்கள் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்த உங்கள் வலைதள பக்கங்களை புதுப்பிக்கவும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குறைகளில் சாத்தியமான அனைத்து நிலுவைகளையும் தெளிவுபடுத்தவும். அதன் முடிவுகளை மனுதாரர்கள், மக்களுக்கு தெரிவிக்கவும். அது செயல்பாட்டில் இருந்தாலும் இந்த தகவல்களை வெளியிடவும். உங்கள் வலைதளங்களை பயன்படுத்தவும். புகார்களின் தீர்வில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் சரியாக செயல்படுகிறார். புதுவை யூனியன் பிரதேசத்தில் எளிதில் அணுகக்கூடிய விசாரணை முகாம்களை அவர் வைத்திருக்கிறார். நீங்கள் உங்கள் சொந்த துறைகளுக்குள் சில கூட்டங்களையும் நடத்தலாம்.
ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெரியவர்கள் அவர்களை சுற்றியுள்ள பகுதியினர் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மெய்நிகர் கூட்டங்களை நடத்தி ஊழல் வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த செயல்களை வெளிப்படைத்தன்மையுடன் செய்தால் அனைத்து வீடுகளுக்கும் நமது நோக்கம் சென்றடையும். வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நேர்மையாக பயன்படுத்துவார்கள்.
மக்களும் அதிக விழிப்புணர்வை கடைபிடிக்கவும், அனைத்து ஆதாரங்களையும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும். சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க சுயதீர்மானத்தை எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story