தஞ்சை அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை மற்றொரு பெண் கைது


தஞ்சை அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை மற்றொரு பெண் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 10:32 AM IST (Updated: 29 Oct 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கமல்ராஜ். இவருடைய மனைவி சித்ரா (வயது35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேபோல் கடந்த 23-ந் தேதி இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்படடது. அப்போது ஆத்திரம் அடைந்த கமல்ராஜ் மனைவி சித்ரா, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ராஜா மனைவி சித்ராவை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சித்ரா மயங்கி கீழே விழுந்தார்.

சாவு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு சித்ராவை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்தில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் ஒப்படைத்தார்.

Next Story