எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக குழு டாக்டர் சுப்பையா சண்முகத்தின் உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுப்பையா சண்முகத்தின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகத்திடம், மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக குழுவில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா ஷேசய்யன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோருடன் 14-வது உறுப்பினராக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் டாக்டர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அகில பாரதீய மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக உள்ளதோடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளதால் மத்திய அரசு இவருக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளதோ என எண்ண தோன்றுகிறது. இவர் மீது சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவதூறு வழக்கு பதிவாகி உள்ளது. மதம் சார்பு உள்ளவரும், பெண்ணை அவதூறு செய்தவருமான டாக்டர் சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமனம் செய்தது ஏற்புடையது அல்ல.
எனவே எய்ம்ஸ் நிர்வாக குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுப்பையா சண்முகத்தின் நியமனத்தை மத்திய சுகாதார துறை அமைச்சகம் ரத்து ச்யெய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story