பண்டிகை காலத்திற்குப்பின் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் - பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவிப்பு
பண்டிகை காலத்திற்குப்பின் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள், துணை இயக்குனா் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. இந்தநிலை தொடர்ந்து சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களுக்குப்பின் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் வழிமுறைகளான கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பொருட்கள் வாங்க சொல்லும்போது, காற்றோட்ட வசதி இல்லாத கடைகளுக்கு செல்வதையும், கூட்ட நெரிசலோடு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவற்றை முறையாக பின்பற்றினால், பண்டிகை நாட்களுக்கு பிந்தைய காலங்களிலும், கொரோனா இல்லாத வாழ்க்கை அமையும்.
மேலும் முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகள் அடுத்துவரும் 6 மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீரை காய்ச்சிப்பருக வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அனைத்து மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா, டெங்கு, டைபாய்டு, மலேரியா, எலி காய்ச்சல், பரிசோதனையை மருத்துவா்களின் ஆலோசனைப்படி செய்துகொள்ள வேண்டும். அலட்சியம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story