துணைத் தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை தகவல்


துணைத் தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2020 3:18 AM IST (Updated: 30 Oct 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

துணைத் தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10-ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு துணைத் தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு துணைத்தேர்விற்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் புதுவை இணை இயக்குனர் தேர்வு பிரிவுக்கு வரும் நவம்பர் 3, 4-ந்தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் கட்டணம் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.205. மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு துணைத்தேர்வுகளுக்கு விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.275. துணை தேர்வுக்கான மறுகூட்டல் கட்டணம் உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305. ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205.

மேல்நிலை முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்யவேண்டுமா? என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு அதன்பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். சென்னை அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story