வாணாபுரம் அருகே, முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக்கொலை - தொழிலாளி கைது


வாணாபுரம் அருகே, முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக்கொலை - தொழிலாளி கைது
x
தினத்தந்தி 30 Oct 2020 4:00 PM IST (Updated: 30 Oct 2020 3:45 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), விவசாயி. அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பாக்யராஜ் (38), தொழிலாளி. இவர்களுக்குள் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாகவும், சம்பவத்தன்று ஏழுமலைக்கும், பாக்கியராஜுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு ஏழுமலையை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story