சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை


சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 30 Oct 2020 7:30 PM IST (Updated: 30 Oct 2020 7:23 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் விஜயபிரபு (வயது 24). இவர், 15 வயது சிறுமியிடம் அடிக்கடி பேசி பழகினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் சிறுமியிடம் கூறி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி, சிறுமியை மிரட்டி உள்ளார். அதன்பிறகு அடிக்கடி மிரட்டி சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயபிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். அந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பளித்தார். அதில் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் சிறுமியை பலாத்காரம் செய்த விஜயபிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் விஜயபிரபு அடைக்கப்பட்டார்.

Next Story