மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2020 3:15 AM IST (Updated: 31 Oct 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகரித்து நாள்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டது. உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. சராசரியாக தினமும் 600 பேர் வரை தொற்று பாதிப்புக்குள்ளானார்கள். பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 128 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 5 ஆயிரத்து 68 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 632 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 908 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 ஆயிரத்து 739 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,637 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 102 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 592 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 488 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா உயிரிழப்பு என்பது 1.70 சதவீதமாகவும், குணமடைவது 87.59 சதவீதமாகவும் உள்ளது.

Next Story