பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது
x
தினத்தந்தி 31 Oct 2020 3:30 AM IST (Updated: 31 Oct 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். தீபாவளி போனஸ் 30 சதவீதம் வழங்கிட வேண்டும். பண்டிகை முன்பணம் தொழிலாளர்களுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் உடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் முன்பு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. சங்க தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். இதில் தொ.மு.ச. சங்க செயலாளர் சேகர், பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பாஸ்கர், துணைச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் அம்பேத்கர், மத்திய சங்க துணைச்செயலாளர் மோகன் உள்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story